கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் நோய் பெருமளவில் பரவி வருகிறது இதன் காரணமாக தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிர படுத்த அறிவுருத்தி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
குரங்கு காய்ச்சல் தொற்று நோய் காரணமாக கர்நாடகாவில் தற்பொழுது 53 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இருவர் குரங்கு காய்ச்சல் தொற்றின் காரணமாக உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது.
1957இல் கியாசனூர் வனப்பகுதியில் குரங்கு காய்ச்சல் வைரஸ் தொற்றானது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் 400 முதல் 500 பேருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் தொற்றானது ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றானது கால்நடை மூலமாகவும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொற்ற பாதிக்கப்பட்ட குரங்குகள் உயிரிழந்த பின்னர் அதிக அளவில் இந்த தொற்றானது பரவுகிறது.
குரங்கு காய்ச்சல் அறிகுறியாக உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இது போன்ற அறிகுறி இருப்பவர்கள் பி சி ஆர் மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
குரங்கு காய்ச்சல் தொற்று கர்நாடகாவில் அதிகளவில் பரவி வரும் நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று காரணமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.