நடிகர் சங்க கட்டட பணிக்காக சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நிதி உதவி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டட பணிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட பணியானது முடிவு பெறாத நிலையில் அதற்காக நிதியானது தற்பொழுது திரட்டப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையின் காரணமாகவே நடிகர் சங்க கட்டிடம் ஆனது முழுமைப் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சங்க கட்டட வேலைக்காக வங்கியில் இருந்து 40 கோடி ரூபாய் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.