தஞ்சை அருகே மடிகை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மனைவி கீதா இவர்களின் 10 மாத பச்சிளம் குழந்தை தரணிகா. இந்த குழந்தைக்கு 10 – வது மாத தடுப்பூசி துறையூர் அங்கன்வாடி மையத்தில் போடப்பட்டது.
குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை கண் அசைவு இல்லாமல் மயங்கிய நிலையில் காணப்பட்டது. இதை கண்ட குழந்தையின் தாய் கதறி அழுத நிலையில் காசநாடு புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, இதை அடுத்து தஞ்சை ராசாமி ராசுதாரர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு உடனடியாக நான்கு ஊசிகளை குழந்தைக்கு செலுத்தினர்.
மருத்துவர்கள் ஊசிகளை செலுத்தி விட்டு சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்து விட்டதாக பெற்றோரிடம் கூறினர். இதைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதார்கள்.
இதை தொடர்ந்து குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததை முன்னிட்டு குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்று உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடலை வாங்குவதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டம் நடத்தி வந்த நிலையில் அங்கு சென்று போலீசார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை அடுத்து கூறிய விசாரணை நடத்தி குழந்தை இறந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் என்று போலீசார் வாக்குறுதி அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் குழந்தையின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனையின் மீது விசாரணை நடைபெற்ற வருகிறது.