திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு பெண் சிசுவை குப்பை தொட்டியில் வீசியதால்.அக்குழந்தையை அங்குள்ள நாய்கள் கடித்து குதரியது அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சுற்று சுற்றி வந்தபடி இருந்துள்ளது.
அந்த வழியாக நடைபயிற்சி செய்யும் அப்பகுதி மக்கள் இதை பார்த்ததும் சந்தேகம் அடைந்து அங்கிருக்கும் நாய்களை விரட்டி அடித்துவிட்டு குப்பை தொட்டியை கிளறி பார்த்துள்ளனர்.
அப்போது அந்த குப்பைதொட்டியில் 2பெண் சிசுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்பு தூய்மை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த விஷயம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி இந்த விஷயம் அங்கு காட்டு தீ போல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதிள்ளது.
இது குறித்து நகர் தெற்கு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த இரட்டை குழந்தைகளையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கல்லூரியில் அணுப்பி வைத்தனர். தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒரு பெண் குழந்தையின் தலை காணவில்லை. பின்பு இந்த 2 பெண் சிசுவை குப்பைதொட்டியில் வீசி சென்றவர் யார் ?என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த குழந்தைகள் முறையட்டர உறவால் பிறந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்சனைய என்றும் ? அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருதபட்டுல்லாதா?அப்படி இருப்பின் அந்த பெண் சிசுகளை வீசி சென்றவர்களின் உருவப்படம் பதிவாகியுள்ளதா என்று பலகோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .