நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம், இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்ரமணியபுரம் திரைப்படம் ஜேம்ஸ் வசந்த் இசையில் வெளியானது மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் சிறந்த இடத்தை பிடித்துள்ள படம் என்று கூறலாம். இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திரங்களும் இன்று வரை பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை, நட்பு என்று இப்படம் பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்தது.
சுப்பிரமணியபுரம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் வெளியிட போவதாக சுப்பிரமணியபுரம் பட குழுவினர் தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் ரீ- ரிலீஸ் ஆக ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் நடிகர் சசிகுமார் தகவலை பகிர்ந்துள்ளார்.