தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் அதனுடன் ரூ. 1000 ரொக்கபரிசும் வழங்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். டோக்கனில் பரிசு தொகுப்பு பெறுவதற்கான நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.