தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை அனைத்து தமிழ் மக்களும் ஆடுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகை விவசாயத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்படும். அதை போல் இந்த வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை இன்று தொடங்கி வைக்கிறார். அந்த பரிசு தொகப்பில் அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.
இந்த வருடம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் நிபந்தனை இன்றி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன் முறையில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது இதற்காக டோக்கன் இரண்டு நாட்களுக்கு முன்பே அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை தடுப்பதற்காக இந்த முறை கையாளப்படுவதாக கூறப்படுகிறது.