வடசென்னையில் ராயபுரம் பகுதியில் தெருநாய் ஒன்று 29 பேரை கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சாலையில் படுத்திருந்த அந்த தெரு நாய் அந்த சாலை வழியாக செல்லும் மக்களை துரத்திச் சென்று அவர்களின் கால்களை குறி வைத்து கடித்துள்ளது. அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
அந்த பகுதி மக்கள் அந்த நாயை அடித்துக் கொன்றனர். மாநகராட்சி துறையினர் அந்த நாயின் உடலை எடுத்துச் சென்று பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர்களின் கடித்த இடங்களை பரிசோதித்ததில் மூன்று வகையான கடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 10 பேர் பள்ளி மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. இப்பகுதியில் வயதானவர்கள் சில பேர் நாய்க்கு பயந்து ஓடியது கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரேத பரிசோதனை அனுப்பப்பட்ட நாயின் உடலை பரிசோதித்ததில் நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நாய் கடித்து சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் கட்டாயமாக ஐந்து டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.