தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்பொழுது பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. ஆனால் பருவமழையானது அக்டோபர் மாதம் இயல்பை விட குறைவான அளவில் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக மற்றும் அதனை ஒட்டி உள்ள கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தற்பொழுது தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அனேக இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் டெல்டா மாவட்டங்களில் அவ்வபோது மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 26 – ந்தேதி உருவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.