திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியை அடுத்துள்ள நல்லி கவுண்டர் பாளையத்தைச் சேர்ந்த முருகன் இவரது மகள் காந்தேஸ்வரி அவிநாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில உடல்நல பிரச்சனை சிறிது நாட்களாகவே இருந்து வந்தது சிறுமியின் இடது காலில் ரத்த ஓட்ட அடைப்பு இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தந்தை கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த தனியார் பள்ளியில் வழக்கம் போல் காலையில் இறைவணக்கம் நடைபெற்றது அப்பொழுது அதில் கலந்து கொண்ட மாணவி இறைவனுக்கு முடிந்த பின்பு வகுப்பிற்கு சென்ற நிலையில் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவினாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றுள்ளனர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை கேட்டு மாணவியின் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மாணவியின் இறப்பு குறித்து அந்த பகுதி போலீஸ் வழக்கு பதிவு செய்து மாணவியின் இறப்பு எதனால் என்று விசாரித்து வருகின்றது.