Home தமிழ்நாடு எஸ்இடிசி(SETC) பஸ்களில் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு..!

எஸ்இடிசி(SETC) பஸ்களில் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு..!

by Pramila
0 comment

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து தொடர்ந்து பயணம் செய்பவருக்கு 10,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று  அறிவித்துள்ளனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்தில் 300 கிலோ மீட்டர் தொலைவு பயணம்,250 வழித்தடங்கள்,இருக்கைகள்,படுக்கை வசதி, குளிர்சாதன வசதி, கழிப்பறை போன்ற வசதிகள் பேருந்தில் உள்ளன.

பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக போக்குவரத்து கழகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.இதன்படி மாதத்தில் 5 முறைக்கு மேல் பதிவு செய்பவருக்கு சிறப்பு சலுகையாக 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் 6 வது முறை பயணம் செய்யும்போது 50 சதவீத கட்டணச் சலுகை தானாகவே கிடைக்கும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்படும். இந்த திட்டம் தற்காலிக மட்டுமல்ல ஒவ்வொரு மாதத்திற்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியில் 10 சதவீதம்  கட்டண சலுகையைஅறிவித்து இருந்தது. மேலும் மே 1ம் தேதி 50 சதவீத கட்டண சலுகையும்  அறிவித்திருந்த நிலையில் இந்தத் சலுகையினால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம் பயணிகள் பத்தாயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டதன் மூலம் 4 லட்சம் வரையிலும் சேமித்துள்ளனர்.மேலும் இந்த சலுகை ஆனது விழா விடுமுறை காலங்களில் பொருந்தாது என்றும் கூறியுள்ளனர்.இதனால் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign