தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வானது தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு பொருத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனி தேர்வை பொருத்தவரை விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
பிளஸ் 2 பொதுத்தேர்விற்காக தமிழ்நாட்டில் மட்டும் 3300க்கு மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது தேர்விற்கு உடைய வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் எடுத்து வருவதற்கும் தேர்வு எழுதி முடித்ததும் விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் மாணவர்கள் முறைகேடில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு 3200 பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வறையில் குடிநீர், இருக்கை, காற்றோட்டம் என அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் செல்போன் தேவரைக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.