நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னிச்சையாக பல உதவிகளை செய்து வந்தது. இதைத் தொடர்ந்து வெள்ள நிவாரணம், சமூக சேவைகள், கல்வி உதவி என எண்ணற்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்த விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழல் இல்லா அரசியலாகவும் மக்களுக்கு உதவும் அரசியலாகவும் செயல்பட விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்து இன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு அனைத்து வகையிலும் முழுமையாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். இவரின் அரசியல் பயணம் பல வெற்றிகளையும் தமிழக மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளையும் தரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் இன்று முதல் கட்சிக்காக முழு நேரமாக உழைப்பார் என்று கூறப்படுகிறது. சினிமாவில் இருந்து விலகிய நடிகர் விஜய் தமிழக மக்களுக்காக கட்சியை முழுமூச்சாக கொண்டு செல்வார் என்று நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வருகின்ற நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.