தமிழக சட்டசபையில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி பல்வேறு வகையான தமிழக பட்ஜெட் திட்டங்கள் வெளியாகி உள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் இல்லம் தேடி திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கோவில் சீரமைப்பு பணிக்காக ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பணி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புரனமைப்பு திட்டத்திற்காக ரூ. 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்தும் மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலா தளங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜவுளி தொழிற்கும் மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, சேலம் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.