திருவிழா, சுற்றுலா தளங்கள் என குழந்தைகள், மக்கள் கூடும் இடங்களில் பஞ்சு மிட்டாய் கலர் கலராக விற்கப்படும். இதை பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அண்மையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் புதுச்சேரியில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
சோதனையின் அடிப்படையில் பஞ்சுமிட்டாய் சாப்பிடுவதனால் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பஞ்சுமிட்டாயில் கலக்கப்படும் ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். பஞ்சமுட்டாயில் ரோடமைன் என்ற ரசாயனம் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் அதிரடி சோதனையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான சதீஷ்குமார் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் கலர் கலராக விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.