ஆபரண தங்கம் விலை கடந்த ஒரு மாத காலங்களாகவே வரலாறு காணாத உச்சத்தில் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாகவே ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து கடந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதில் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதை தொடர்ந்து சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 500 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 52 ஆயிரத்தை கடந்துள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராமிற்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ. 6, 500 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளி கிராமிற்கு ரூ. 2 அதிகரித்து ரூ. 84 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.