விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந்தேதி கொடியேற்றம் துவங்கப்பட்ட நிலையில் மாசி பெருவிழா நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு தேரோட்டம் திருவிழா இன்று நடைபெற இருப்பதால் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு பொது தேர்வு, அரசு அலுவலகப் பணிகள் மற்றும் முக்கியமான அலுவலக பணிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த விடுமுறையை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.