தமிழகத்தில் வெப்பநிலை தற்பொழுது இருக்கும் வெப்பநிலையின் அளவைவிட மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட வெப்பநிலையின் அளவு அதிகரித்து காணப்படும் என்றும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று முதல் வருகின்ற 13-03-2024 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும், சென்னையை பொருத்தவரை தற்பொழுது காணப்படும் வெப்பநிலையின் அளவைவிட வருகின்ற நாட்களில் அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.