சமீப காலமாகவே உலக அளவில் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் இன்னும் சில நாட்களில் முழுமையான முறையில் உலக அளவில் செயல்பட தொடங்கினால் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த ஒரு கேள்விக்கும் பதிலை தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி எந்த ஒரு வேலையையும் மிக சுலபமான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறன் கொண்டது. சமீபத்தில் செய்தி வாசிப்பாளராக ஏஐ தொழில்நுட்ப முறையில் பெண் போல் வடிவமைத்த ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து தற்பொழுது கேரள மாநிலம் கொல்லம்பலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்று ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஷ் என பேரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஐரிஷ் ஆசிரியை சேலை அணிந்து, அணிகலன்கள் அணிந்து பள்ளியில் பாடம் நடத்தி வருகிறது.
மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்குடனே பதில் அளிக்கும் ஏஐ தொழில்நுட்பம் சில நேரங்களில் நெட்வொர்க் குறைபாடு காரணமாகவும் மாணவர்களின் கூச்சல் காரணமாகவும் பதில் அளிப்பதில் சற்று தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
அமைதியான சூழல் இருக்கும்பொழுது மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை உடனுக்குடன் பதில் கிடைக்கிறது. மாணவர்கள் பாடதிட்டத்தில் இல்லாத கேள்விகள் கூட ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியர் இடம் கேட்ட பொழுது சளைக்காமல் பதிலளித்தது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. சிறு குழந்தைகள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியையை விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த ஐரிஷ் – க்கு கோபம் வராது மேலும் குழந்தைகளை எரிச்சல் ஊட்டும் வகையில் எந்த ஒரு செயலும் செய்யாது என்னும் காரணத்தினால் சிறு குழந்தைகள் இந்த தொழில்நுட்பத்தால் உருவான ஆசிரியை விரும்புகின்றனர்.