சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழையானது கொட்டி தீர்த்தது இதன் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் பெரும் சேதத்திற்கு ஆளானது. மாவட்டங்களில் சீரமைக்கும் பணி மற்றும் பாதித்தவர்களுக்கான நிவாரண பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கண்காணித்து நிவாரண பணியை தொடங்கி வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காட்சியளித்தது இதனால் பல பகுதியில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் தமிழக அரசு வெள்ளம் பாதித்த பகுதியில் வாழும் மக்களுக்கு 6 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கி உதவியது. இதை தொடர்ந்து தற்பொழுது நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் அதிக கனமழையில் காரணமாக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது அதற்கான டோக்கன் இன்று விநியோகிக்கப்படுவதாக தகவலை வெளியிட்டுள்ளது.