சமீப காலமாக பல மாநிலங்களில் மழையின் காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்ட உள்ள நிலையில் தக்காளியின் விலை பல மடங்காக அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூலை ஆரம்பத்தில் இருந்தே தக்காளி விலை பல மடங்காக அதிகரித்தது இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஜூலை முதல் வாரத்தில் இருந்த விலையிலிருந்து குறைந்து ஜூலை இறுதி வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100 விற்பனையில் இருந்தது. மேலும் சில்லறை கடைகளில் ரூ. 150 வரை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தக்காளியை வாங்கி சமைப்பதற்கே பலரும் யோசித்தனர். இந்த நிலையில் தற்பொழுது தக்காளியின் வரத்து கோயம்பேடு மார்க்கெட்டில் சற்று அதிகரித்து உள்ளதால் ஆகஸ்ட் மாதம் முதலே தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கிலோ தக்காளி தற்பொழுது ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.