தற்போது தக்காளியின் விலை 120 ரூபாயை எட்டியுள்ளது. பருவமழை ஆரம்பமானதின் காரணமாக தக்காளியின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. ஆந்திரா,மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வாடிக்கையாக வரவேண்டிய தக்காளி வரவில்லை.அதனால் தமிழ்நாட்டில் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.இரண்டு,மூன்று நாட்களில் விலை குறைந்து 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.
தற்போது மீண்டும் அதிகரித்த நிலையில் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கும் சில்லறையாக கடைகளில் விற்பவர்கள் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மாதங்களில் முகூர்த்த நாட்கள் வருவதால் தக்காளி விலை குறைய வாய்ப்பே கிடையாது.இதற்கு பதிலளித்த நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தக்காளியின் வரவை சீராக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.இன்னும் ஒரு மாத காலத்தில் தக்காளியின் விலை பழைய நிலைமைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.