Home தமிழ்நாடு மதுரையில் பற்றி எரிந்த ரயில் – 9 பேர் பலி..!

மதுரையில் பற்றி எரிந்த ரயில் – 9 பேர் பலி..!

by Pramila
0 comment

லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது . இதில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் சிலர் சிக்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது . இதைதொடர்ந்து தீயை அணைக்கும் பனி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது  . 

இந்த ரயில் விபத்து சுமார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது . இவர்கள் மதுரையில் சாமி தரிசனத்திர்க்காக வந்துள்ளனர்  . இன்று மீனாச்சி அம்மன் சாமி  தரிசனம் செய்து விட்டு நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்துள்ளனர் . இன்று அதிகாலை  இவர்களது ரயில் மதுரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அப்போது அங்கு இருந்த சில சக பயனிகள் சிலிண்டர் மூலமாக சமைக்க முற்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

இதனால் பதறி அடித்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கியுள்ளனர்.  தகவல் அறிந்து விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் ,  தீயை அணைக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் விபத்தில் சிக்கி சுமார் 9 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது . அங்கு வந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர் , ரயிலில்  சிலிண்டர் கொண்டுவரப்பட்டது எப்படி என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரதீப் கூறுகையில் : 

இதுவரையில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் 5 பேர் ஆண்கள் என்றும் 3 பேர் பெண்கள் என்றும் தெரிவித்தார் . இன்னொருவரின் உடல் இன்னும் கண்டறியவில்லை என்று அவர் கூறினார் .

 

You may also like

Leave a Comment

Our Company

Lorem ipsum dolor sit amet, consect etur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis.

Newsletter

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign