தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகி வருபவர் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மன் . இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது . இவர் இதற்க்கு முன்பாக மரியான் , திமிரு போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் தற்போது ரஜினிகாந்துடன் நடித்து வெளி வந்த ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்த படத்தில் இவர் மலையாளியாகவே படம் முழுவதும் பேசி நடித்து அவரது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயிலர் படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எகிறி விட்டது . இவரை தேடி படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது .
இந்தநிலையில் மாமனார் ரஜினிகாந்துடன் நடித்துமுடித்த கையோடு மருமகன் தனுஷ் அவர்களுடன் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் . இந்த படத்திலும் ஜெயிலர் வர்மனை விட மாஸ்சாக படத்தில் நடித்து மிரட்டப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது .
இந்த படத்தின் பட பிடிப்பு 2017 ஆம் ஆண்டு துவங்கியது அடுத்த வருடத்திலேயே வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் சில காரனங்களால் தள்ளிப்போனது எனவே இந்த வருடம் வெளியிடுவர்தர்க்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது . அதுமட்டுமின்றி ஜெயிலர் திரைபடத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து துருவ நட்சத்திரம் மற்றும் கேப்டன் மில்லர் என்ற இரண்டு படங்கள் வெளிவர இருக்கிறது . ஜெயிலர் வர்மனின் ரசிகர்கள் ஆவலுடன் இரண்டு படங்களையும் எதிர்பார்த்துள்ளனர் .