தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நாட்களில் இருந்தே நோய் தொற்றின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல தொந்தரவுகளும் மக்களிடையே காணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு போன்ற நோய் தொற்றுகளாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்பொழுது டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திடீரென்று திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயபாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டதில் தற்பொழுது விஜயபாஸ்கரின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.