இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து அன்றைய தினம் விநாயக சிலை பூஜைக்காக வைக்கப்படும். அதை தொடர்ந்து 3 அல்லது 5 நாட்கள் என்ற எண்ணிகையில் விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இன்னும் விநாயகர் சதுர்த்திக்கு 18 நாட்களில் இருக்கும் நிலையில் விநாயகர் சிலை செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை ஆனது செப்டம்பர் 17ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை ஆணையரும் பல்வேறு கோயில்களின் தலைமை செயலாளரும் தெரிவித்திருப்பதால் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று கூறப்படுகிறது.
1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் கீழ் விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை செப்டம்பர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் மற்றும் பல்வேறு கோயில்களின் முதன்மை தலைவர்களின் அறிக்கையின் படி விநாயகர் சதுர்த்தி செப் 17.09.2023 க்குப் பதிலாக 18.09.2023 கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.