தமிழக பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, சிவகங்கை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ள மாவட்டமாக மதுரை, திருப்பூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.