Home தமிழ்நாடு சளிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர்..!

சளிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர்..!

by Pramila
0 comment

கடலூரில் ஒரு சிறுமிக்கும் சளிக்கு பதில் நாய்க்கடி ஊசி போட்டதில் சிறுமிய உடனே மயக்கம் அடைந்து விழுந்தது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வளவு அலட்சியமாக சிறு குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதா என்று அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் சத்தம் போட்டு உள்ளார்.

கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரம் கருணாகரன் என்பவர் கடலூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இதனை பற்றி புகார் ஒன்றை அளித்துள்ளார். எனது மகள் சாதனா வயது 13 உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.அப்பொழுது மருத்துவர் பரிசோதித்து மாத்திரை மற்றும் ஊசி போடுமாறு சீட்டில் எழுதி இருக்கிறார்.

அதை செவிலியரிடம் கொடுத்தபோது அதை சரியாக கவனிக்காமல் இரண்டு ஊசிகளை போட்டார். ஏன் இரண்டு ஊசி என்று கேட்டேன் நாய் கடித்தால் இரண்டு ஊசி தான் என்று கூறினார். எனது மகளுக்கு சளி பிரச்சனை தான் என்று பதில் அளித்துள்ளனர். உடனே சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டாள். அவரை உடனே மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர். இவ்வளவு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியரை பணியிலிருந்து நீக்குமாறு சிறுமியின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign