கடந்த ஜூன் ஒன்றாம் தேதி செல்வத்தின் தாய் தெய்வானை இறந்து விட்டார். அந்த சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை. திருத்தணி அடுத்து ஆர்.கே.பேட்டை அருகே உள்ள விளக்கணாம்பூடி மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி மணிமேகலை வயது 56. ஜூன் ஒன்றாம் தேதி அன்று செல்வத்தின் தாய் தெய்வானை இறந்துவிட்டார். மாமியாரின் ப்பை தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளார்.
இதை தொடர்ந்து மணிமேகலை இறப்பை தாங்க முடியாமல் அன்று இரவே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார்.இதில் மணிமேகலின் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேலும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றியே மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.