சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி நிர்வாகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்பொழுது சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள பிரபல வி. ஆர் மாலுக்கு வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்ததை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து வி.ஆர்.மால் நிர்வாகம் திருமங்கலம் போலீசாருக்கு தகவலை தெரிவித்தது. அதை தொடர்ந்து மோப்ப நாய்கள் மூலம் சோதனையில் ஈடுபட்ட திருமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் தற்பொழுது மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.