தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருது, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற மூன்று நாட்களும் டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.