Home » Blog » தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

by Pramila
0 comment

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில்  நிலவி வருகிறது.  இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அந்த வகையில் தஞ்சை,  நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை,  திருவாரூர் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு அடுத்த3 மணி நேரத்தில் கனமழைத்து வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.