தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையை பொருத்தவரை வறண்ட வானிலே நிலவும் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் சுற்று அதிகரித்த காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.