இன்று செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை வறண்ட வானிலேயே நிலவ கூடும் என்றும் தற்பொழுது நிலவும் வெப்பநிலையை விட வருகின்ற இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வருகின்ற இரண்டு நாட்களில் வெப்பநிலையின் அளவானது சற்று அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.