தற்பொழுது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுவாகவே அதிகரித்து வருகிறது இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 4 – ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை ஆனது அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மார்ச் மாதம் வரை வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வெப்பநிலையானது அதிகரித்து காணப்படும் என்றும் மார்ச் மாதம் வரை இதே வெப்பநிலை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.