தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகவே வெயிலின் தாக்கம் பொதுவாகவே அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை இருந்தபோதிலும் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பநிலை தற்பொழுது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலையின் அளவானது அதிகரித்த காணப்படுகிறது. இன்று முதல் வருகின்ற 11.03.2024 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என்றும் பொதுவாகவே அனைத்து மாநிலங்களிலும் வறண்ட வானிலையே நிலவ கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இயல்பை விட வருகின்ற நாட்களில் வெப்பநிலையின் அளவானது இரு மடங்கு அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் வருகின்ற நாட்களில் வெப்பநிலையானது இரு மடங்காக அதிகரித்து காணப்படும். என்றும் அதிகபட்ச வெப்பநிலையானது 33 – 34 டிகிரி செல்சியஸ் காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது 23 – 24 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.