“லியோ” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் படம் “லியோ” . இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் , அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் . படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் . இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயரிக்க உள்ளார் . மிஷ்கின், சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது .
இந்தாண்டு அக்டோபர் மாதம் “லியோ” படமானது ரிலீசாகும் என்று எதிர்பார்கப்படுகிறது . சமிபத்தில் “லியோ” முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது . இப்படத்தின் இசை வெளியிட்டு விழா செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது . பின்னர் துபாய் மற்றும் மலேசியாவில் லியோ படத்துக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் அதன்பின் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெரும் என்று இருதியாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் பங்கேற்க்கஉள்ளார் என கூறப்படுகிறது . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த படம் “விக்ரம்” தற்போது “லியோ” படத்தை இயக்கி இருப்பதால் அவரை சிறப்பு விருந்தினராக வருவதற்கு வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது .