வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, கிண்டி, எலும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை மற்றும் மிக கனமழை காண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெறும் வரை மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் வருகின்ற 4 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்டம் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.