வங்கக் கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சென்னையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக்ஜாம் புயல் நெல்லூர், மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்துள்ளது.
சென்னையில் இந்த புயலின் தாக்கம் இன்று வரை நீடித்துக் கொண்டு இருக்கிறது. சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் தீவு போல் காட்சி அளிக்கிறது. இன்று வரை சில பகுதிகள் இந்த புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னையை தாக்கும் என்றும் பல செய்திகள் உலா வருகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள வெதர்மேன் பிரதீப் ஜான் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் வருகின்ற 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம் என்றும் இதனால் சென்னைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.