தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் வருகின்ற 8, 9, 10 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 8 – ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஏனைய பகுதிகளில் வழக்கத்தை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னை வருகின்ற நாட்களில் இயல்பை விட வெப்பநிலையின் அளவானது அதிகரித்த காணப்படும் என்றும் தகவலை தெரிவித்துள்ளது.