கரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. கொரோனா வைரசை விட 100 மடங்கு மிக வேகமாக மோசமான ஆபத்து விளைவிக்கும் தன்னை கொண்ட பறவை காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
சுகாதாரத்துறை நிபுணர்கள் உருமாறிய பறவை காய்ச்சல் வைரஸ் எச்5என்1 சில இடங்களில் வேகமான தன்மையுடன் பரவி வருவதால் சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த உருமாறிய எச்5என்1 வகை பறவை காய்ச்சல் தொற்று உலகளவிய நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடும் அபாயம் நெருங்க கூடும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பறவை காய்ச்சல் குறித்து ஆராய்ச்சி செய்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி தற்பொழுது சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த தகவலின் படி இந்த உருமாறிய எச்5 என்1 வகை பறவை காய்ச்சலானது மிகப்பெரிய நோய் தொற்றாக மாறக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் உலக அளவில் பரவும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனிதர்கள் உட்பட பாலூட்டிகள் வழியாகவும் இந்த நோய் தொற்று ஏற்படும் என்று தகவலை வெளியிட்டுள்ளார்.