சென்னையில் உள்ள அம்பத்தூரில் கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சாரம்மாள் வயது 25 , இவர் கூலித் தொழிலாளி , திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன . ஆனால் சாரம்மாள் திருமணம் ஆனதை மறைத்து அம்பதுறை சேர்ந்த ஜான்சன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் . இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து , தன்னை ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டுள்ளது உணர்ந்த ஜான்சன் . மனைவியை விட்டு பிரிந்து அவருக்கு தெரியாமல் ஆவடியில் தனியே வீடு எடுத்து தங்கி உள்ளார்.
ஜான்சன் ஆவடியில் தனியாக இருப்பது தெரியவந்த சாரம்மாள் அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . ஜான்சன் கோபம் முற்றி போக என்ன செய்வது என்று தெரியாமல் சாரம்மாளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார் . பின்பு சடலத்தை தனது வீட்டில் இரண்டு நாட்களாக வைத்திருந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார் . பின்பு கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .