தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினி. நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் கூட்டம் மிகப்பெரியது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் ஏராளம். சில வருடங்களாக ரஜினிகாந்திற்கு ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை தென்னிந்திய அளவில் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் பல கோடியே தென் இந்திய அளவில் குவித்துள்ளது. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் என்று படத்தில் நடித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ், டி. ஜே. ஞானவேல் உடன் அடுத்தடுத்து பலப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை முன்னிட்டு கலாநிதி மாறன் கார் ஒன்றை பரிசாகும் நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் தான் கலாநிதி மாறன் வழங்கிய காரில் பயணம் செய்யும் பொழுது தான் ஒரு பணக்காரனாக உணர்வதாக கூறியுள்ளார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கருத்தை குறித்து விமர்சகர் பிஸ்மி பேட்டி ஒன்று கூறியது நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய கோடீஸ்வரர் அவரிடம் உள்ள பணங்களை எண்ணுவதற்கு இரண்டு கைகள் போதாது என்றும். பல கோடிக்கு சொந்தக்காரராக நடிகர் ரஜினிகாந்த் இருந்தாலும் மனதளவில் அவர் மிகவும் எளிமையானவர்.
ரஜினிகாந்த் தற்பொழுது பணக்காரராக தன்னை மிகைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும். தான் வைத்துள்ள பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் அமெரிக்காவில் சூதாடி பணத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பேசப்பட்டது வருகிறது.