மார்கழி மாதம் என்றாலே தெய்வ அருள் நிறைந்த மாதம் ஆகவும் அனைவரும் தெய்வத்தை தினம் தோறும் வணங்கக்கூடிய மாதமாக அமைந்திருக்கிறது. இந்த மாதத்தில் தெய்வத்திற்கு தினம் தோறும் பூஜை செய்வது மிகவும் சிறந்த பலனை நமக்கு தரக்கூடும்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை நினைத்துக் கொண்டு கோலமிட்டு கடவுளை வணங்குவது நம் நினைத்த காரியம் கைகூடும். திருமணம் ஆகாதவர்கள் இந்த மார்கழி மாதத்தில் தினம் தோறும் பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி கடவுளை வழிபட்டு வந்தால் திருமண வரன் விரைவில் கைக்கூடும். இது போன்ற பல நன்மைகளையும் வரங்களையும் அள்ளி வழங்கக் கூடிய மாதம் தான் இந்த மார்கழி மாதம்.