பொதுவாகவே கோவில் மற்றும் வீட்டு பூஜை அறையில் மணி அடைத்தால் அந்த மணியின் ஓசை கேட்டு வீட்டில் உள்ள துர் தேவதைகள் இந்த மணியின் ஓசை கேட்டு வெளியே ஓடிவிடும். மேலும் பேய் பிசாசுகள் மற்றும் தீய சக்திகள் இந்த மணியின் ஓசை கேட்பதன் மூலம் வீடுகள் மற்றும் கோவில்களில் இருக்காது என்பது ஐதீகம்.
இந்த மணியின் ஓசை பேய் பிசாசுகளுக்கும், தீய சக்திகளுக்கும் ஒரு விதமான பயத்தை கொடுக்கும் என்ற பெரியவர்கள் கூறுகிறார்கள். எனவே பூஜைக்கு முன்பு மணி அடித்து இது போன்ற துஷ்ட சக்திகளை விரட்டி அடிப்பதற்காகவே இந்த மணி அடித்தல் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளோம்.