நாளை வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்…!
திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் நடித்த “லியோ” திரைப்படம் நாளை வெளியாக உள்ளது . இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் .
அனிருத் இசையமைத்துள்ளார் , திரிஷா , சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . நாளை “லியோ” வெளியாக இருக்கும் நிலையில் “லியோ” இணையத்தில் வெளியிட தடை விதிக்குமாறு லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது . அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் லியோ படத்தை 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .