Home » Blog » திரையங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடிய  ரசிகர்கள் …!

திரையங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடிய  ரசிகர்கள் …!

சல்மான் கான் , கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் “டைகர் 3”.

by Pramila
0 comment

சல்மான் கான் ,  கத்ரீனா கைஃ  நடிப்பில் ,  கபீர்கான் இயக்கி  கடந்த 2012 ஆம்  ஆண்டு வந்த திரைப்படம் “ ஏக் தா டைகர்” . இப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது .  மேலும்  இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் “ டைகர் ஜிந்தா ஹே”  திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .  இப்படத்தின் மூன்றாம் பாகமான “ டைகர் 3”  நேற்று வெளியானது .  இப்படத்தில்  சல்மான் கான் ,  கத்ரீனா கைஃப்  நடிப்பில் , மணிஸ் சர்மா இயக்கத்தில் ,  யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திர்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுவரும் நிலையில் ,

 இப்படத்தின் முதல் நாள் வசூலாக ரூ.40 கோடி பெற்றுள்ளது என்று .  இந்த நிலையில் மராட்டிய மாநிலம்  நாசிக் மாவட்டத்தில்,  மாலேகானில் உள்ள  ஒரு திரையரங்கில்  “டைகர் 3” திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள்   நடிகர் சல்மான் கானின் என்ட்ரியை கொண்டாடும் விதமாக  திரையரங்குக்குள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர்  .  அதுமட்டுமின்றி அந்த பட்டாசுகள் நாலாப்புரமும்  சிதறியதால்  மக்கள் அலறி  ஓடினர் .  இதனால் அங்கு சிறிது நேரம் திரையரங்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது .  இதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது .

இந்த சம்பவத்தை போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் நேற்று இரவு  திரையரங்கில்  பட்டாசு வெடிப்பில்  ஈடுபட்டவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்ய உள்ளதாகவும் .  குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியவில்லை என்றும் தெரிவித்தார் .

இந்த சம்பவத்தை பற்றி நடிகர் சல்மான் கான் கருத்து தெரிவிக்கையில் “  டைகர் 3” படம் திரையிடப்பட்ட போது ,  பட்டாசு வெடிப்பது மிகவும் ஆபத்தானது என்றும் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் பார்த்து ரசியுங்கள்,  மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.