மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களிடம் பிரபல்யமான தலைவராக இருந்தாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(22.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுவது ‘மகிந்த ராஜபக்ச போன்று இந்த நாட்டுக்கு சேவை செய்யும் தலைவர் வேறு யாருமில்லை என்றும் இருப்பினும் அவர் ஓய்வு பெறும் காலம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.