இயக்குநரும் சின்னத்திரை நடிகர்ரும் ஆனா போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரன் மற்றும் சகோதரியை இழந்த சோகம் சின்ன திரையை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது .கண்ணிமாடம் படத்தின் மூலம் இயக்குனர், மற்றும் சின்னத்திரை நடிகருமான இவர் பல நிகழ்சிகளில் கலந்து கொண்டு சமூகம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் சின்னதிரை நடிகர் சங்கதலைவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில், போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று சென்னையில் எம்.எம்.டி.ஏ பகுதியில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து, சகோதரி வளர்மதி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் சென்னை வந்துள்ளார்.
அப்போது, தனது சகோதரியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரங்கநாதன் கதறி கதறி அழுதுள்ளார். சரியாக அதே நேரத்தில், ரங்கநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.