சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து , அனிருத் இசையமைத்து , நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் , கடந்த 10 ஆம் தேதி உலகளவில் வெளிவந்த படம் ஜெயிலர்.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மலையாள பட நடிகர் மோகன்லால், தெலுங்கு பட நடிகர் சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது . அதுமட்டுமின்றி வாசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 158 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது .